தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்துவரும் கன மழை பொழிந்துவருகிறது. அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.
கூடுதலான நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி, ஆயிரத்து 652 கனஅடியாக இருந்த நீர் இருப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, வைகை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.