தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளம்! - கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளம்!
Kumbakkarai falls

By

Published : Aug 9, 2020, 7:37 PM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது, கும்பக்கரை அருவி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் விழுகின்ற நீரானது குளிர்ச்சியாகவும், மூலிகைத் தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதால், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கும்பக்கரை அருவி பகுதிக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவி பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details