தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களிடம் சேட்டை... வன அலுவலர் மீது தாக்குதல்... முன்னாள் ராணுவ வீரர்கள் கைது... - kumbakarai

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் பெண்களிடம் சேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பாண்டியராஜன், பாலமுருகன், கந்தசாமி கைது செய்யப்பட்டனர்.

பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது
பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது

By

Published : Jun 25, 2022, 5:43 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் பாண்டியராஜன், பாலமுருகன், கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் மதுபோதையில் பெண்களிடம் சேட்டையில் ஈடுபட்டுவருவதாக வனத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், வன அலுவலர்கள் 5 பேரையும் பிடித்து விசாரிக்க முற்பட்டபோது, அவர்கள் அலுவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.


இதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் உதவியுடன் 5 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் பாண்டியராஜன், பாலமுருகன், கந்தசாமி மூவரும் முன்னாள் ராணுவத்தினர் என்பதும், அனைவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details