தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - 5 மாவட்ட விவசாயிகள் சங்கம்

தேனி: லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குடிநீர் செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம் நடைபெற்றது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 25, 2020, 9:03 AM IST

மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக ரூ.1, 295 கோடி மதிப்பில் சிறப்பு கூட்டுக் குடிநீர் திட்டத்தை 2018ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் இருந்து குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக குழாய் வழியாக தண்ணீர் கொண்டு கொண்டு செல்தற்கு திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் என விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி கூடலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கம்பம் பள்ளத்தாக்கில் இரு போக சாகுபடியே கேள்விக்குறியாக உள்ள நிலையில் குழாய் வழியாக 100கன அடி நீர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டம் முற்றிலும் பாலைவனமாக மாறிவிடும்.

இத்திட்டத்திற்கு மாற்றாக வைகை அணையை தூர்வாரி கூடுதலாக தண்ணீர் சேமித்து குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யலாம். ஆதலால் அலுவலர்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்வதோடு, இதற்கான மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கவன ஈர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details