தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களை வஞ்சிக்கும் கேரள அரசு: ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் புகார்! - five district famers association

தேனி: கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை உள்ளிட்ட மூன்று தாலுகாக்களையும் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டுமென ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

theni
theni

By

Published : Aug 25, 2020, 7:51 PM IST

ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், "கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை 1956 மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது கேரள அரசு தனதாக்கிக் கொண்டது.

இந்த மூன்று தாலுகாக்களிலும் 56 விழுக்காடு மக்கள் தமிழர்களே உள்ளனர். அவர்கள், அப்பகுதிகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் கேரள அரசால் அதிகமாக வஞ்சிக்கப்படுகிறார்கள்.

மூணாறு, பெட்டிமுடி நிலச்சரிவு விபத்தில் அது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தில் செலுத்திய அக்கறையை, கேரள அரசு பெட்டிமுடி நிலச்சரிவில் காட்டவில்லை. நிவாரணம் அறிவிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதால் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மேலும், மேற்கு வங்க மாநிலம் டார்ஜ்லிங் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ள தன்னாட்சி அந்தஸ்து வழங்கிட வலியுறுத்தி ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேனியில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு மதிப்பெண் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details