தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தத்தளித்த சிறுவர்கள்: 'அவர்கள்' இல்லாதிருந்தால் விபரீதமே - தேனி அருகே அசம்பாவிதம் தவிர்ப்பு!

தேனியில் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை, தீயணைப்பு மற்றும் மீட்புவீரர்கள் உயிருடன் மீட்டனர்.

flood  rescue team  firefighters  firefighters rescue students  firefighters rescue students from flood  firefighters rescue students from flood in theni  theni news  theni latest news  தேனி செய்திகள்  தேனியில் வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்  வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்  தீயணைப்பு வீரர்கள்
வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்

By

Published : Nov 23, 2021, 10:11 PM IST

Updated : Nov 24, 2021, 7:08 AM IST

தேனி:போடி அருகே திருமலாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் நான்கு பேர் இன்று (நவ.23) அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள குரங்கணி, முதுவாக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், கொட்டக்குடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த மாணவர்கள், வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளனர். பின்னர் தடுப்பணையின் மதகுப்பகுதியில் ஏறி நின்றுள்ளனர்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நான்கு மாணவர்களையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

மேலும் மழைக் காலங்களில் ஆற்றுப் பகுதிகளுக்குச் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழை பாதிப்பு; வேலூரில் மத்தியக் குழு ஆய்வு

Last Updated : Nov 24, 2021, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details