தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை அறையே தற்போது கரோனா கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் சிகிச்சை பெற்று வருபவர்கள் என கரோனா குறித்த அனைத்து தகவல்களும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கரோனா கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அலுவலர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.