தேனி: பழனிசெட்டிபட்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் சிவகாசி மேட்டுப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது தனது காரை ஹோட்டலின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணன் வருவதற்குள், கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.