தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தீ விபத்து! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: சின்னமனூர் அருகே அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Fire breaks out at Cinnamanur Registrar's Office
Fire breaks out at Cinnamanur Registrar's Office

By

Published : Nov 21, 2020, 9:02 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. கோட்டூர், சீலையம்பட்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை, அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பத்திரப்பதிவு இங்கு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அலுவலகப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் தீயணைப்புத் துறையினருக்குர் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

சின்னமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தீ விபத்து

அலுவலகத்தின் வெளிப்புறத்தில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்ததால் உள்பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைவது தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக சின்னமனூர் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்தடையால் நீண்ட நேரமாகப் பயன்பாட்டில் இருந்த ஜெனரேட்டரின் வெப்பம் அதிகரித்ததால் தீப்பற்றிருக்கக் கூடும் எனத் தெரியவந்தது.

இதையும் படிங்க:அரசு பணியாளர் அல்லாத பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details