தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது இரண்டு மகள்கள், 10 வயது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். முதல்கட்ட விசாரணையில், "ராமுவின் மகனான 10 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (50) என்பவர் ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். இது சம்பந்தமாக இராஜதானி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.