தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகில் அமைந்துள்ள மஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் கோழிக்கடை நட்த்தி வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், மலைச்சாமி, ராமு என இரண்டு மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
மூத்தமகன் மலைச்சாமி பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜோதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனது திருமன வாழ்க்கை கசந்த காரணத்தினால் மலைச்சாமி விரக்தியில் தினமும் மது அருந்திவிட்டு தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.