தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமைப்படுத்தலால் ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்: மிஞ்சியது ஒருவரே! - தந்தை மகன் தற்கொலை

தேனி: ஆண்டிபட்டி அருகே மனைவியும், மகனும் உயிரிழந்ததால் மனமுடைந்தவர் தனது மற்றொரு மகனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த நபர்
தற்கொலை செய்த நபர்

By

Published : Aug 19, 2020, 4:43 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன் (55), ராமலட்சுமி (50). ஆண்டிபட்டியில் துணிக்கடை நடத்தி வரும் இவர்களுக்கு வசந்த் (24), சசிக்குமார் (19), குருபிரசாத் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில், சசிக்குமார் மகாராஷ்டிராவில் மெக்கானிக் வேலை செய்துவந்த நிலையில், கரோனா பரவலால் சொந்த ஊர் திரும்பினார். தேனி மாவட்டத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், 14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக போடி அரசு பொறியியல் கல்லூரி முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தியடைந்த சசிக்குமார் முகாமில் கடந்த ஜூலை 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தாயார் ராமலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று (ஆக18) உயிரிழந்தார்.

இந்நிலையில், மணிகண்டனும், அவரது மகன் வசந்த் ஆகிய இருவரும் ஆண்டிபட்டியில் உள்ள அவர்களது துணிக்கடையில்இன்று (ஆக.19)தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details