தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடவு பணிகள் பாதிக்கப்படாமலிருக்க தற்காலிக தடுப்பணை கட்டிய விவசாயிகள் - தேனி

கண்மாய் தூர்வாரபடாததால் நடவு பணிகள் பாதிக்கப்படமாலிருக்க விவசாயிகளே ஒன்றிணைந்து உடைந்த தடுப்பணையை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.

தேனியில் நடவு பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக தடுப்பணை கட்டிய விவசாயிகள்
தேனியில் நடவு பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக தடுப்பணை கட்டிய விவசாயிகள்

By

Published : Sep 27, 2022, 8:09 PM IST

தேனி:பெரியகுளம் கீழ் வடகரையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு நீராதாரமாக சின்ன பூலாங்குளம் மற்றும் பெரிய பூலாங்குளம் குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு கும்பக்கரை அருவியில் இருந்து நீர் பிரிந்து அனுப்பப்படும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை உடைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் குளத்திற்கும் நீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்களில் சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது.

பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் சாகுபடி பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதனால் ஒன்றிணைந்து உடைந்த தடுப்பணையில் பணிகள் மேற்கொண்டு தற்காலிக வாய்க்காலை தூர்வாரி குளத்திற்கு நீர் கொண்டு செல்லும் வகையில் செய்துள்ளனர்.

தேனி

இதையும் படிங்க: தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் பரவும் போலி வாட்ஸ்அப் மெசேஜ்கள்!

ABOUT THE AUTHOR

...view details