தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை ; கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை - பசு மாட்டை தாக்கிய சிறுத்தை

தேனியில் சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்தது, தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தையை விரைந்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
சிறுத்தையை விரைந்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

By

Published : Oct 11, 2022, 7:31 PM IST

தேனி:பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாந்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இதில் நேற்று இரவு அந்தப் பகுதியில் திரிலோக சந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கி அடித்துக் கொண்டு பாதி உடலை தின்ற நிலையில் விட்டுச் சென்றது.

இதனைத் தொடர்ந்து பசு மாட்டின் உரிமையாளர் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுத்தை தாக்கப்பட்டு உயிரிழந்த பசு மாட்டை ஆய்வு செய்து அதை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால் இதுவரையில் 7 பசு மாடுகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட ஆடுகள் தாக்கப்பட்டு பலியாகி உள்ளது. தோட்டங்களில் காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களையும் தாக்கி செல்வதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தையை விரைந்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

இதுமட்டுமின்றி, விவசாயிகள் தொடர்ந்து சிறுத்தை தாக்குதலால் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கால்நடை உள்ளிட்டவைகளை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:இரு கழிவறை இருக்கைகளுடன் ஓர் கழிப்பறை

ABOUT THE AUTHOR

...view details