தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி அருகே போலி மருத்துவர் கைது! - காவல்துறை விசாரணை

தேனி: பழனிசெட்டிபட்டி அருகே முறையாக மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fake-doctor-arrested-near-theni
fake-doctor-arrested-near-theni

By

Published : Nov 24, 2020, 6:08 PM IST

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான் (46). இவர் கடந்த 5 வருடங்களாக கோடாங்கிபட்டியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த மருந்தகத்தில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருந்ததாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குழுவிற்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி குழு இணை இயக்குநர் லட்சுமணன் நடத்திய ஆய்வில், அப்துல் ரகுமான் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில், இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் நேற்றிரவு அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கோடாங்கிபட்டியில் உள்ள அவரது மருந்தகமும் தற்காலிகமாக அடைக்கப்பட்டது. போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இரும்புக் கதவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

ABOUT THE AUTHOR

...view details