தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகராஜா மெட்டு, இரவங்கலாறு, வென்னியாறு ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.இவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக 25 கி.மீ., தொலைவில் உள்ள சின்னமனூருக்குத்தான் செல்லவேண்டும்.
ஆனால், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடைபட்டதால், அப்பகுதி மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நிலையை அறிந்த சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வினோத்குமார். தனது மாத ஓய்வூதிய தொகையை கொண்டு அவர்களுக்கு உதவிவருகிறார்.
ஊரடங்கால் முடங்கியுள்ள இந்த மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கில் இவரது மாத ஓய்வூதியம், தன்னார்வலர்கள், சின்னமனூர் பாஜக சார்பில் வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு முதல்கட்டமாக கடந்த வாரம் 100 குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.