தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு - ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் - Theni: Tamil Nadu Primary School Teachers Alliance

தேனி: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 400 மாணவ - மாணவிகளின் குடும்பத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு - ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்
ஊரடங்கு - ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

By

Published : Apr 30, 2020, 12:34 AM IST

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வருமானமின்றி ஏழை, எளிய மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கிளை சார்பாக, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவ – மாணவியர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

தேனி யூனியனில் உள்ள 45 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் 400 மாணவ - மாணவிகளின் குடும்பங்களுக்கு 450 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலச் செயலாளர் முருகானந்தராஜா தலைமையில், 3 குழுக்களாகப் பிரிந்து சமூக இடைவெளியுடன் இந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

#Theni

ABOUT THE AUTHOR

...view details