தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பொறியியல் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடக்கம்

தேனி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியது.

File pic

By

Published : Jun 8, 2019, 12:58 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலேயே இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து அந்தந்த பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பதார்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

அரசு பொறியியல் கல்லூரி

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு போடி அரசு பொறியியல் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் 7 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், போடி அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது.

இந்தாண்டுதேனி மாவட்டத்தில் 1751 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இப்பணிகள் அனைத்தும் சென்னையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details