தேனி:கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வனத்துறையினருக்கு கட்டப்பனை பகுதியில் இருந்து குமுளி பகுதிக்கு யானை தந்தங்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வல்லக்கடவு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் வந்த ஒரு காரை சோதனை செய்தபோது கார் டிக்கியில் இருந்த யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.