தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் கல்லாப்பெட்டியை உடைந்து ரூ.20 ஆயிரம் திருட்டு - தேனி எலக்ட்ரிக்கல்ஸ் கடை திருட்டு

தேனி: பெரியகுளம் அருகே பட்டப்பகலில் கடையில் நுழைந்து கல்லாப் பெட்டியை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகப் பரவிவருகின்றன.

electricals-shop-theft-cctv-in-theni
electricals-shop-theft-cctv-in-theni

By

Published : Dec 14, 2020, 2:05 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் சீராளன் என்பவர் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்திவருகிறார். டிச.12ஆம் தேதி வழக்கம்போல கடையைத் திறந்த இவர், நண்பகல் 2 மணி அளவில் தேநீர் குடிக்க அருகிலுள்ள் கடைக்குச் சென்றார். பின்னர் கடைக்குத் திரும்பிய சீராளன் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவி காட்சிகள்

அதைடுத்து அவர், கடையின் சிசிடிவி காட்சியைப் பார்த்ததில், இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கல்லாப் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றிருப்பது பதிவாகியிருந்தது. பின்னர் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கல்லூரிப் பேராசிரியையின் வீட்டில் 52 பவுன் நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details