தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில், முதலாண்டு முதல் இறுதியாண்டுவரை சுமார் 400 மாணவர்களும், 100 பயிற்சி மருத்துவர்களும் பயின்றுவருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கியுள்ளனர்.
ராகிங் தடுப்புச் சட்டத்தில் 8 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது! - தேனி
தேனி: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலாண்டு மருத்துவ மாணவர் முகேஷ்குமார் என்பவர் தன்னை மூன்றாமாண்டு மாணவர்கள் ராகிங் செய்ததாக ராக்கிங் தடுப்பு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் துறைரீதியாக மாணவர்களிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில் ராகிங் செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என உறுதியானது.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாமாண்டு மருத்துவ மாணவர்களான குருபிரகாஷ், முகமதுஇம்ரான், கவின் தமிழன், மவுலிதரண், பிரவீன்குமார், ஹரிஹரன், ஜெப்ரின், நிலோஸ் ஆகிய எட்டு பேர் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.