சென்னை:இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேனிஅருகேஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு உத்தமபாளையம் வட்டம், குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமியை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.
இந்த விபத்தில் நாகராஜ் (வயது 50), முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, சிவக்குமார் (வயது 41), வினோத்குமார் (வயது 43), கண்ணுச்சாமி (வயது 65), தேவதாஸ் (வயது 55), கலைச்செல்வன் (வயது 35), மற்றும் கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.