தேனி: அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாலம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதற்கேற்ப ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒற்றைத்தலைமை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக உடனான பேச்சுவார்த்தைக்காக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, பாஜக தலைமை அலுவலகத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் சந்தித்து பேசினர்.