தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, கம்பம் உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்கள், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு - வயிற்றில் ஈரத்துணியைக் கட்டி ஆர்ப்பாட்டம்
தேனி: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதைக் கண்டித்து அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தேனி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயரத்தியதை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஈட்டிய விடுப்புத் தொகையை பிடித்தம் செய்ததை திரும்பத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் பார்க்க: கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி