தேனி: ஆண்டிப்பட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு முகமது சுல்தான், முகமது சுகேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான முகமது சுல்தான் அடைக்கப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இளையமகன் முகமது சுகேஸ் போடியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். காஜாமைதீனுக்கு அடைக்கப்பட்டி கிராமத்தில் 15 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள நிலையில் இந்த சொத்துக்களை காஜாமைதீன் தனது இரண்டு மகன்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.
இதில் இளைய மகன் முகமது சுகேஸ்யிலுக்கு மட்டும் அதிக மதிப்புடைய சொத்துக்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த மகன் முகமது சுல்தான் சொத்து பிரித்து வழங்கியதில் தந்தை பாகுபாடு காட்டியதாக கூறி அடைக்கப்பட்டியில் உள்ள அவரது நிலத்தில் ஆளுயுற குழிதோண்டி அதில் இறங்கி மண்ணை போட்டு மூடி ஜீவசமாதி அடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.