உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனைக் கருத்தில்கொண்ட மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களைச் சொந்த ஊர் அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இந்நிலையில், துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக விண்ணப்பித்திருந்த 17 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று கேரள மாநிலத்திலுள்ள கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.