தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(40). கூலித் தொழிலாளியான தனது மனைவி வீரமணி ஊரான கொத்தபட்டியில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் 11ஆம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கொத்தபட்டியில் உள்ள அங்குராசு என்பவரின் தோட்டத்தில் மறுநாள் காலை உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து வீரமணி அங்கு சென்றார். அதனையடுத்து, கணவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிகொண்டு கொத்தபட்டி சுடுகாட்டில் கொண்டு வந்து போட்டு விட்டு, இறுதி சடங்கு செய்வதற்காக பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் மயானத்தில் அனாதையாக பிணம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின், விசாரணை செய்ய ஆரம்பித்தபோது, வீரமணி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் ஒரு மாதம் கழித்து நேற்று வீரமணியை கைது செய்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில், அய்யனாரை திட்டமிட்டு கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார்.
மொய் பணத்தில் மது குடித்த கணவன் கொலை..! மனைவி கைது அவர் அளித்த வாக்கு மூலத்தில், மது குடித்துவிட்டு அடிக்கடி என்னை அடித்துக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று ஒரு விஷேச நிகழ்ச்சிக்காக கொடுத்துவிட்ட மொய் பணத்தை, மொய் செய்யாமல் அய்யனார் மது வாங்கி குடித்து விட்டார். இதனால் வந்த கோபத்தில், மதுபோதையில் இருந்த அவரை கத்தியால் கழுத்தை அறுக்க முயற்சித்தேன். அவர் சாகாததால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். என வீரமணி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு காவலில் உள்ள வீரமணியை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.