தேனி:ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்திற்குஅருப்புக்கோட்டையிலிருந்து விசைத்தறிக்கூடங்களுக்கு நூல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த மினி வேன், எதிர் திசையில் மதுரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தின் பக்கவாட்டில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர். அரசுப்பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில், நூல் ஏற்றிக் கொண்டு வந்த வேனில் உடன் இருந்த சங்கரநாராயணன்(60) என்பவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மேலும் படுகாயங்களுடனும் சிகிச்சைப்பெற்று வந்த வேன் ஓட்டுநர் அருப்புக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன்(52) இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்த நிலையில், இருபதிற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பேருந்தும் மினி வேனும் மோதி விபத்து: மினி வேன் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழப்பு இதையும் படிங்க: விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உதவிய காவலர்...விசாரணையில் அதிர்ச்சி தகவல்