தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தேவைக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! - Drinking water for the people of demand in madurai

தேனி: மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து ஆற்றின் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

By

Published : May 26, 2020, 10:16 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட வைகை அணை தற்போது 41.88 அடியாக உள்ளது.

இந்நிலையில் கோடை வெப்பத்தால் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறன.

இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.

அதனை ஏற்ற அரசு வைகை அணையிலிருந்து மூன்று நாள்களுக்கு 216 மி.கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் 1,500 கனஅடி வீதம் வைகை அணையிலிருந்து பொதுப்பணித் துறையினர் தண்ணீர் திறந்துவிட்டனர்.

வரும் மே 28ஆம் தேதி காலை 6 மணியளவில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோடையில் நீர்வரத்து இல்லாத சூழலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரைப் பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:அமராவதி ஆற்று தண்ணீர் தாராபுரம் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details