தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயை கொடுமைப்படுத்திய தந்தையை கொலை செய்த மகன்! - தேனியில் தந்தையை கொன்ற மகன்

தேனி: தேவதானப்பட்டி அருகே மதுபோதையில், தாயை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த தந்தையை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

father death son arrest

By

Published : Nov 4, 2019, 9:17 PM IST

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.காமக்காபட்டியைச் சேர்ந்த தம்பதியர் தனபாலன் (54) – பஞ்சவர்ணம். இவர்களுக்கு திவாகர்(25), ஸ்ரீதர்(22) என்ற இரு மகன்கள் உள்ளனர். கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான தனபாலன் நாள்தோறும் தனது மனைவியுடன் சண்டையிட்டு தகாராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையை கொலை செய்த மகன் கைது

இந்நிலையில், நேற்றிரவு (நவ.03) மதுபோதையில் வீட்டிற்கு வந்த தனபாலன் பஞ்சர்வணத்துடன் சண்டையிட்டு அவரை அடித்து துண்புறத்தியுள்ளார். தனது தாயை அடித்து சித்ரவதை செய்வதைப் பொறுக்காத இளைய மகன் ஸ்ரீதர், தந்தை தனபாலனை அருகில் கிடந்த ரீப்பர் கட்டையால் தலையில் சாமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில், மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தனபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனபாலன் அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூத்த மகன் திவாகருக்கு தகவலளித்தனர். உடனடியாக வீட்டிற்கு வந்த திவாகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, தந்தையை கொலை செய்த மகன் ஸ்ரீதரை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details