விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக தேனி தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த பரப்புரையில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பழனிசெட்டிபட்டி, போ.மீனாட்சிபுரம், போடி நகர், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அல்லிநகரம், லட்சுமிபுரம், பெரியகுளம் நகர் மற்றும் தேவதானப்பட்டிக்குச் செல்கிறார்.
முதலாவதாக பழனிசெட்டிபட்டியில் பேசிய அவர், "சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு பயந்து கொண்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி, அதிமுக தலைமை அலுவலகம் ஆகியவற்றை மூடி வைத்தனர். ஜெயலலிதா சமாதிக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர். அத்தகைய பெருமைக்குரியவர் கருணாநிதி. ஆனால் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் பொதுமக்கள் என யாருக்கும் விசுவாசமாக இல்லை.