திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று (நவ. 27) தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரியகுளத்தில் இன்று (நவ. 28) கொண்டாடப்பட்டது.
உதயநிதி பிறந்தநாள் விழா: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
தேனி: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுகவினர் தங்க மோதிரம் அணிவித்தனர்.
முன்னதாக பெரியகுளம் அண்ணா சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரம் அணிவித்தனர்.
இதனிடையே பெரியகுளம் பகுதியில் உள்ள அமமுகவினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.