சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் இன்று(டிச.21) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.
முன்னதாக மதுரை சாலையில் பேண்டு வாத்தியங்களுடன் கேஸ் சிலிண்டரை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலிண்டரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன்:
தேனி - பங்களாமேடு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது, "பிரதமராக வந்ததும் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் எனக் கூறிய மோடி அதனை நிறைவேற்றவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பண மதிப்பிழப்பு செய்துவிட்டு, 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சடித்தனர்.