தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2020, 7:52 AM IST

ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்கு ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ பாராட்டு!

தேனி: ஆண்டிப்பட்டி தொகுதியின் 25 ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேனி
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ ஆ.மகாராஜன் பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆண்டிபட்டியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. அதேபோல் கடமலை மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள ரெங்கசமுத்திரம், ராஜகோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், புள்ளிமான் கோம்பை, திம்மரச நாயக்கனூர் உள்ளிட்ட 8 கிராம ஊராட்சிகளுக்கு ஏற்கனவே ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மீதமுள்ள 22 ஊராட்சிகளுக்கும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் உள்ள 280 கிராமங்களுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காமல் வைகை ஆற்றிலிருந்து நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், சட்டசபை கூட்டத் தொடரில் என்னுடைய கன்னிப் பேச்சில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஒன்றிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் இதை வலியுறுத்தி எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 2 முதலமைச்சர்களை தந்த ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படவில்லை என பேசினேன்.

dmk

இதனையடுத்து தமிழ்நாடு அரசு இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முதற்கட்டமாக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிலையம் அமைத்து, குழாய்கள் மூலம் மேற்கூறிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் உடனடியாக தீர்வு கண்டு ரூபாய் 110 கோடி ஒதுக்கீடு செய்த உள்ளாட்சித்துறையையும், தமிழ்நாடு அரசையும் பாராட்டுகிறேன்.

அதே சமயம் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து கண்மாய்களை நிரப்ப தொடர்ந்து குரல் கொடுத்து பொதுப்பணித் துறை அமைச்சரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது குறித்து விளக்கி இந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details