தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா நினைவு தினம் - டீ, வடை டோக்கன் கொடுத்து கூட்டத்தைச் சேர்த்த திமுக - அண்ணா நினைவு தினம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் கூட்டம் இல்லாததால் அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வந்தால் பரிசு டோக்கன் கிடைக்கும் எனக் கூறி திமுகவினர் கூட்டத்தைச் சேர்த்துள்ளனர்.

Etv Bharat அண்ணா சிலைக்கு மரியாதை செய்த திமுகவினர்
Etv Bharatஅண்ணா சிலைக்கு மரியாதை செய்த திமுகவினர்

By

Published : Feb 3, 2023, 5:53 PM IST

அண்ணா சிலைக்கு மரியாதை செய்த திமுகவினர்

தேனி:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அண்ணாவின் சிலைக்கு பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் கூட்டம் கூட்டவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பரிசு டோக்கன் கிடைக்கும் என பெண்கள் உட்பட பலரிடம் திமுகவினர் சொல்ல, ஏதோ பெரிதாக இருக்கும் என நம்பி பொதுமக்கள் பலரும் கூட்டத்திற்குச் சென்றனர்.

ஆனால், அங்கு கொடுக்கப்பட்டது என்னவோ டீ, வடைகளுக்கான டோக்கன் என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். முனுமுனுத்தபடி இந்த டீ வடைக்காகவா வந்தோம் என்றவாறே வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் கலைந்துசென்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details