தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்பாட் குடும்பம்.. அண்ணனை எதிர்த்து களமிறங்கும் தம்பி! - maharajan

தேனி: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அண்ணனும், அதிமுக சார்பில் தம்பியும் களமிறக்கப்படுவது அரசியல் ஆர்வலர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

dmk admk

By

Published : Mar 18, 2019, 8:09 AM IST

நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை நேற்று மாலை 7 மணியளவில் திமுக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் அதிமுகவும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதன்படி, ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட ஆண்டிப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆ.மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட அதிமுக சார்பில் அக்கட்சியின் ஆண்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆ.லோகிராஜனை அதிமுக தலைமை களமிறக்கியுள்ளது.

இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பதால், ஆண்டிப்பட்டி தொகுதியின் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.


ABOUT THE AUTHOR

...view details