அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட திராவிடர் கழகத்தினர் 20 க்கும் மேற்பட்டோர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பில் இந்து மனு தர்ம நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
தேனியில் இந்து மனுதர்ம நகல் எரிப்பு: திராவிட கழகத்தினர் கைது! - arrested
தேனி: தேனியில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்ற 20 க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
Breaking News
இருபினும் வெவ்வேறு இடங்களில் இருந்த திகவினர் திடீரென ஒன்றுகூடி திராவிடர் கழக கொடியுடன் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவர்களிடமிருந்த மனுதர்ம நகலை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திகவினரின் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.