தமிழ்நாடு

tamil nadu

உழவர் சந்தைகள் செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By

Published : Jun 6, 2020, 3:30 PM IST

தேனி: ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் உழவர் சந்தைகள் நாளை( ஜூன்.7) முதல் செயல்பட மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அனுமதியளித்துள்ளார்.

உழவர் சந்தைகள் செயல்பட உத்தரவு
உழவர் சந்தைகள் செயல்பட உத்தரவு

கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், போடி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனையடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க பொது மக்களின் இருப்பிடத்திற்கே காய்கறிகள் விநியோகம் செய்திடும் வகையில், வாகனங்களில் நடமாடும் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐந்தாவது முறையாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவில் நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, தேனி மாவட்டத்தில் நாளை (ஜூன்.6) முதல் உழவர் சந்தைகள் செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல், சுகாதாரம் பேணுதல், முகக் கவசம் அணிதல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில், போடி, பெரியகுளம் உழவர் சந்தைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திலும் செயல்பட உள்ளது.

தேனி, சின்னமனூர், கம்பம் உழவர் சந்தைகள் அந்தந்தப் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில், வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் செயல்படும். எனவே விவசாயிகள், பொது மக்கள் உழவர் சந்தையில் விற்பனைக்கு உள்ள தரமான காய்கறிகள், பழங்களை பெற்று பயன்பெறலாம் என அதில் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details