தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியகுளத்தில் செம்மண் கலந்த குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் அதிர்ச்சி!

தேனி அருகே பெரியகுளம் நகராட்சியில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெரியகுளத்தில் செம்மண் கலந்த குடிநீர் வினியோகம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
பெரியகுளத்தில் செம்மண் கலந்த குடிநீர் வினியோகம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

By

Published : Dec 1, 2022, 10:18 PM IST

தேனி:பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக பல கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக பெரியகுளம் நகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் செம்மண் கலந்த மழை நீர் அப்படியே சுத்திகரிக்கப்படாமல் குழாய்களில் கழிவுநீர் போல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக கன மழை பெய்யும் காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் கூட சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாத நாட்களில் வழங்கப்பட்ட குடிநீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசும் அளவில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் பெரியகுளம் நகராட்சி குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளத்தில் செம்மண் கலந்த குடிநீர் வினியோகம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

இதனால் இந்த குடிநீரை பருகும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளில் ஆளாவதாகவும், குடிநீருக்கு தனியாக வரியை வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்குவதை கண்டிப்பதோடு முறையான சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையிம் படிங்க:மத்திய அரசின் "ஒரே நாடு ஒரே உரம்" திட்டம்: தூத்துக்குடியில் உரம் விநியோகம்!

ABOUT THE AUTHOR

...view details