தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு - ஊர்வலமாக

தேனியில் விநாயகர் சதூர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த 90 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

தேனியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
தேனியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

By

Published : Sep 2, 2022, 8:43 AM IST

தேனி: விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு தேனியில் இந்து எழுச்சி முன்னனி சார்பாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெரியாற்றில் நேற்று கரைக்கப்பட்டன. அந்த வகையில் தேனி – மொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து 4 அடி முதல் 20 அடி வரையிலான 90க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

தேனியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பின்னே சென்றனர். அதன்பின் சிலைகள் அனைத்தும் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள பெரியாற்றில் கரைக்கபட்டன. இந்த ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகைப்பயிற்சி!

ABOUT THE AUTHOR

...view details