குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அச்சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டும், கறுப்புச் சட்டை அணிந்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதன்பின்பு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கண்களில் கறுப்புத் துணி கட்டியவாறே மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.