தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக சார்பில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்! - நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்

தேனி: அதிமுக சார்பில், குளங்களைத் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்

By

Published : Aug 7, 2020, 6:52 PM IST

தேனி மாவட்ட அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் செலவில், மாவட்டத்தில் உள்ள குளங்களைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அதிமுகவினர், தன்னார்வலர்கள் ஆகியோர் குளம், கண்மாய்களைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக பெரியகுளம், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 12 குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக சார்பில் குளங்கள் தூர்வாரி, கரைகளைச் சுற்றி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்வாக, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி - மத்துவார்குளம் தூர்வாரும் பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 7) கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக ஓ.பன்னீர் செல்வம், மண்வெட்டியால் மண் அள்ளி பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி இயந்திர ஓட்டுநர்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details