உலகத்தையே திக்குமுக்காட வைத்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நோய்த் தொற்றால் 2 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தக் கொடூர தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
பேரிடராக அறிவிக்கப்பட்டு, கரோனாவைக் கட்டுப்படுத்த பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1கோடியை ரூபாயை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக அளித்தார்.