தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக அரசிற்குப் பொது மக்கள் ஆதரவு தர வேண்டும்' ஓபிஎஸ் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஓ. பன்னீர் செல்வம்

தேனி: திமுக, காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை கடந்த 10ஆண்டுகளில் செய்து காட்டியுள்ள அதிமுக அரசிற்கு பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

OPS
OPS

By

Published : Feb 17, 2021, 8:39 PM IST

தமிழ்நாடு வருவாய், கால்நடை வளர்ப்பு பராமரிப்பு மற்றும் சமூக நலத்துறை சார்பில், இன்று (பிப்.17) தேனி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,"உணவு உற்பத்தியில் நாட்டில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு, தொடர்ந்து ஐந்தாவது முறையாக மத்திய அரசின் 'கிருஷி கர்மான்' விருது பெற்றுள்ளது. அதேபோல் தொழில்துறை வளர்ச்சியிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு சென்னையில் ரூ.28 ஆயிரம் கோடிக்குப் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்குத் தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.

பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் ஓபிஎஸ்

தேனி மாவட்டத்தில் கூட பிப்ரவரி 28ஆம் தேதி, சிட்கோ தொழிற்சாலை அமையவுள்ளது. எனவே, திமுக, காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததைக் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்து காட்டிய அதிமுக அரசிற்குத் தொடர்ந்து பொது மக்கள் ஆதரவுக்கரம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details