தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் நம்மிடம் உறுதிப்படுத்தவில்லை.
அண்மைக்காலமாக அரசியல் பிரபலங்கள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிமுகவினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தனது உடல்நலம் குறித்து அவ்வப்போது கேகே நகரில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில்தான் ஓ.ராஜா பரிசோதனை செய்துகொள்வது வழக்கம் என்றும், அதுபோன்ற வழக்கமான பரிசோதனைக்காகக்கூட அவர் மருத்துவமனை சென்றிருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:செய்தியாளரைத் தாக்கிய ஓபிஎஸ் சகோதரர்? - உறவினர்கள் சாலை மறியல்