தேனி மாவட்ட ஐக்கிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் போடியில் நிறுவப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவ வெண்கலச் சிலையைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (பிப். 24) திறந்துவைத்து வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகையில், "உழைப்பால் உயர்ந்த உத்தமர், எளிமையின் அடையாளம், ஜெயலலிதாவால் மூன்றுமுறை முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் பண்பின் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்.
கலியுகத்தில் தர்மராக வாழ்ந்துவருபவர் ஓபிஎஸ், அர்ஜுனராக இபிஎஸ். இருவரும் இணைந்து மகாபாரதத் தேர்தலை நடத்த இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்திச் செல்லும் கிருஷ்ணராகப் பிரதமர் மோடி இருப்பதால், வருங்காலத்தில் தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.