தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர் - முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம்

தேனி: முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.42.45 லட்சம் மதிப்பீட்டில் ஜக்கம்மாள் குளம் தூர்வாரும் பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Deputy Chief Minister initiates kudimaramath works in Theni
Deputy Chief Minister initiates kudimaramath works in Theni

By

Published : Jan 6, 2021, 12:00 PM IST

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம், கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிமராமத்து பணிகள் தொடங்கவுள்ளன.

இதையடுத்து, குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஜக்கம்மாள் குளம் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். ரூ.42.45 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாருதல், கரைகள் பலப்படுத்துதல், நீர் வழிப்பாதையில் இரு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர்

இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆயகட்டுதாரர்கள் மூலம் குடிமராமத்துப் பணி: பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details