தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த பானு, பெருமாள்புரத்தைச்சேர்ந்த ஈஸ்வரி ஆகிய இரண்டு பெண்களும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு டெங்குப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் இருவரையும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.