தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்நிலைகளை ஆக்கிரமித்த கடையை அகற்றிய வருவாய்த் துறையினர்! - நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த கட்டடங்கள் இடிப்பு

தேனி: குன்னூரில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த கடையை நான்காம் கட்டமாக பலத்த காவல் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர், இடித்து அப்புறப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு கடை
ஆக்கிரமிப்பு கடை

By

Published : Feb 15, 2021, 2:02 PM IST

தேனி குன்னுாரில் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், 74 நீர்நிலைகளில் ஆக்கிரமித்த கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குன்னுார் பேருந்து நிலையம், டி.டி.கே. ரோடு ஆற்றோர கடைகளில், கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் குமார் தலைமையில், வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னுாரில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்றம்

'இதில் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம்கட்டமாக 42 கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இன்று (பிப். 15) நான்காம் கட்டமாக பலத்த காவல் பாதுகாப்புடன் பொக்லைன் ஜேசிபி மூலம் வருவாய்த் துறையினர் அதிகாலையிலேயே குன்னுார் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையை இடிக்க வந்தனர்.

கடையில் உள்ள பொருள்களை எடுக்க சற்று நேரம் அவகாசம் விதிக்கப்பட்ட பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் கடையை இடித்தனர். மேலும் காலை நேரங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு அகற்றுவதால் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அலுவலகப் பணியாளர்கள் பேருந்துகளில் வேலைக்குச் செல்ல காலதாமதமானது.

பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக குன்னூர் பகுதியில் பரபரப்பாகக் காணப்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளாமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: FASTag இல்லையேல் இருமடங்கு கட்டணம் - நினைவிருக்கட்டும் மக்களே!

ABOUT THE AUTHOR

...view details