தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனம் மோதி கடமான் பலி; நீருக்காக வெளியேறியபோது பரிதாபம்! - Deer

தேனி: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த கடமான் வாகனத்தில் அடிபட்டு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடமான்

By

Published : May 25, 2019, 5:28 PM IST

Updated : May 25, 2019, 6:00 PM IST


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வனவிலங்குகள் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டங்களுக்கு தண்ணீர் தேடி வருகின்றன.

இந்நிலையில் டாணாத்தோட்டம் மலைப்பகுதியில் இருந்து ஆண் கடமான் ஒன்று தண்ணீருக்காக வெளியேறியுள்ளது. அப்போது சாலையைக் கடக்க முயன்றபோது கடமான் மீது வேகமாக வந்த வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கடமான் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கண்டமனூர் வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனச்சரக அலுவலர்கள், மானின் உடலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து, பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த கடமான் வாகனத்தில் அடிபட்டு பலி

கண்டமனூர் வனச்சரக பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி வரும்போது வாகனங்களில் மோதி இறப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதனால், வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : May 25, 2019, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details